துபாய் செப், 4
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
மேலும் காயம் காரணமாக விலகிய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக இன்றைய போட்டியில் அக்ஷர் பட்டேல் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தஹானிக்கு பதிலாக ஹசன் அலி அல்லது முகமது ஹஸ்னைன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
எனவே இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையும். துபாயில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.