தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் சென்னை பரங்கிமலை, ஸ்ரீரங்கம், சிதம்பரம், தி.மலை, போளூர், விருத்தாசலம், மன்னார்குடி, குழித்துறை, சாமல்பட்டி ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதே போல், சென்னை அருகே உள்ள சூலூர்பேட்டை
ரயில் நிலையமும் புத்தாக்கம் பெற்றுள்ளது. இதனை பிரதமர் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.