வேலூர் செப், 2
வேலூர் மாவட்டத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரத்தசோகை, தன்சுத்தம், குடற்புழு நீக்கம், கைகழுவுதல் குறித்து சமுதாய வளர் உறுப்பினர்கள் உதவியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டதில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் வருகிற நவம்பர் 30 ம் தேதி வரை பிரசார வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, சட்ட மன்ற உறுப்பினர் அமலு விஜயன் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.