பாஜக உடன் கூட்டணி வைத்ததால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட பலர் அதிமுகவில் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். குறிப்பாக, அதிமுகவில் இருக்கும் இஸ்லாமியர்கள், கட்சி தலைமை மீது அதிருப்தி அடைந்துள்ளனர். நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளிப்படையாக இதுகுறித்து பேசப்பட்டது. இந்நிலையில், அதிமுக சிறுபான்மையினர் அணியின் முக்கிய நிர்வாகி கே.எஸ்.முகமது கனி, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.