LSG-ஐ CSK வீழ்த்திய நிலையில், சிறப்பாக விளையாடிய தோனிக்கு 6 வருடங்களுக்குப் பிறகு ஆட்ட நாயகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
IPL வரலாற்றில் ஆட்டநாயகன் விருதை வென்ற மிக வயதான வீரர் தோனிதான்(43). 11 பந்தில் 26 ரன்கள் எடுத்த தோனி, ஆயுஷ் பதோனியை ஸ்டெம்பிங் செய்து, விக்கெட் கீப்பராக 200-வது ஆட்டமிழப்பை பதிவு செய்தார். அத்துடன் அப்துல் சமத் விக்கெட்டை மிரட்டலான ரன் அவுட் மூலம் கைப்பற்றி அசத்தினார்.