இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC, தங்களது சேவைகளை மேம்படுத்த சிஸ்டம் பராமரிப்பு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. வரும் 12ம் தேதி மதியம் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை (4 மணி நேரம்) இந்தப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில், தங்களது வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு UPI சேவைகள் இயங்காது என்று HDFC அறிவித்துள்ளது.