தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 10,134ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ. 81,072ஆகவும் விற்கப்பட்டது. இதனுடன் செய்கூலி, சேதாரம் சேர்த்து, மத்திய, மாநில ஜிஎஸ்டி வரிகள் சேர்த்து ஒரு சவரன் 24 கேரட் தங்கம் ரூ.1 லட்சத்துக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.