சென்னை மார்ச், 25
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 3வது நாளாக குறைந்ததால், நகை பிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 குறைந்து ₹65,480க்கும், கிராமுக்கு ₹30 குறைந்து ₹8,185க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ₹110க்கு விற்பனை செய்யப்படுகிறது.