சென்னை மார்ச், 15
குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 15ம் தேதி ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான உதவித்தொகை இன்று காலை 9:30 மணிக்கு மேல் பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதனிடையை விடுபட்ட பயனாளிகள் புதிதாக விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என நேற்றைய பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு நற்செய்தி அறிவித்திருந்தார்.