கேரளா செப், 2
திருவனந்தபுரத்தில் நாளை தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடை பெற உள்ளது.
மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மண்டல அளவில் கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இதில் மாநிலங்களில் சட்டம் – ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள் ,பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்.
அதன்படி தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் 30வது தென் மண்டல கவுன்சில் கூட்டம் வரும் நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பின்னராய விஜயனை சந்தித்து பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.