புதுச்சேரி செப், 1
புதுச்சேரியை சேர்ந்த ஒருவர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். 61 வயதான இவர் தனது உறவினர்களை காண புதுச்சேரிக்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவி இறந்ததால் குடும்ப பொறுப்புகளை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக புலம்பியுள்ளார்.
இதை பார்த்த உறவினர்கள் அப்பகுதியை சேர்ந்த சுமார் 40 வயதான கணவரை இழந்த பெண்ணிடம் இது தொடர்பாக எடுத்துக் கோரி திருமணம் செய்து கொள்ளும்படி தெரிவித்துள்ளனர்.
மேலும் திருமணம் செய்ய அந்த பெண்ணும் சம்மதித்ததைத் தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தை வீடியோவாக எடுத்த சில நபர்கள் அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.