சென்னை பிப், 22
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வு இன்று தொடங்கி பிப்ரவரி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது தேர்வுத்துறை வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றி எவ்வித குளறுபடியும் இன்றி குறிப்பிட்ட காலத்திற்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு அடுத்த மாதம் 28 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.