சென்னை பிப், 21
ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விதிகளுக்கு உட்பட்டு நடக்கிறதா என ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர் காற்று ஒளி மாசு விதிகளை மீறி சிவராத்திரி நடத்த அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தர மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஆணையிட்டுள்ளது.