நாகப்பட்டினம் செப், 1
நாகை வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் சாலை ஓர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் இலவசமாக வழங்கும் விழா நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் வகித்தார் நிகழ்ச்சியில் ரூ. 22.50 லட்சம் மதிப்புள்ள 21 காய்கறி பழங்கள் விற்பனை செய்பவர்களுக்கும், .10 பூ வியாபாரம் செய்பவர்களுக்கும் சேர்த்து 31 வண்டிகளை நகர மன்ற தலைவர் புகழேந்தி வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா ஒன்றிய பொறியாளர் முகமது இப்ராஹிம் துணை தலைவர் மங்களநாயகி மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.