துபாய் பிப், 2
ஐக்கிய அரபு அமீரக துபாயில் வசிக்கும் சவுத் இந்தியா மக்களான கேரளா, தமிழ்நாடு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநில மக்களை கவரும் வகையில் ஏகே மீடியா சார்பில் நடைபெற்ற சவுத் சைடு கார்னிவல் என்ற மிகப்பெரும் இசை மற்றும் கலை நிகழ்ச்சி துபாயில் உள்ள எதிசலாத் அகடாமியில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு கேரளாவில் மிகவும் புகழ்பெற்ற யூடூயூபர்களான MHR குரூப் சேர்ந்தவர்களுடைய பாடல்களும் மேலும் தமிழகத்தில் பிரபலமான யூடூயூபர் பால் டப்பா குழுவினரின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளும் மேலும் பேஷன் ஷோ, கரகாட்டம், கதகளி ஆட்டம், சிலம்பாட்டம், தண்டமேளம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது இந்நிகழ்ச்சிகள் பல முக்கிய பிரமுகர்கள் கலை மற்றும் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சி மிகப்பிரமாண்ட வெற்றியடைந்ததை தொடர்ந்து அதனை கொண்டாடும் விதமாக வெற்றி கொண்டாட்ட நிகழ்வு துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கேரளத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அருண்குமார் கிருஷ்ணன் – CEO ஆம்பர் கிளினிக்ஸ் and SCI ஈவென்ட்ஸ்,
மகேஷ் கிருஷ்ணன் – SCI ஈவென்ட்ஸ்,
ராஜேஷ் குமார் – Senior சேம்பேர் இன்டர்நேஷனல்,
ராஜீவ் பிள்ளை & Friends
பைபி ஜான் – UBL TV,
முனீர் அல்வபா – CEO Alwafaa குரூப், பிராஜீப் & பிந்து – சினர்ஜி ஈவென்ட்ஸ், தஸ்வீர் & டேனியா – மீடியா வேவ்ஸ் ஈவென்ட்ஸ், மேலும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் மேலும் சிறப்பு விருந்தினர்களாக அமீரகத்தில் வசிக்கும் தமிழக ஊடகவியலாளர் கேப்டன் டிவி வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், தினக்குரல் தமிழ் தேசிய நாளிதழின் வளைகுடா தலைமை நிருபரும் வணக்கம் பாரதம் வார இதழின் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா ஆர் மீடியா ரஷீத் தமிரேட்ஸ் தாஹிர் உள்ளிட்ட தமிழ் மற்றும் மலையாள இன்ஸ்டால் பிரபலங்கள் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சி AK மீடியா மற்றும் ஈவென்ட்ஸ் நிறுவனர் அப்சாத் அஜீஸ் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது.
மேலும் நிகழ்ச்சிக்கு வந்த அத்தனை முக்கிய பிரமுகர்களுக்கும் ஊடகவியலர்கள் அனைவருக்கும் ஏகே மீடியா நிறுவனர் அப்சாத் உணவு உபசரித்து நன்றி தெரிவித்து இதுபோன்ற ஆதரவை என்றும் அளிக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.