துபாய் ஜன, 28
ஐக்கிய அரபு அமீரக துபாயில் கற்றல் கல்வி மையம் சார்பாக அதன் நிறுவனர் முனைவர் ஸ்ரீ ரோகிணி ஏற்பாட்டில் நடைபெற்ற “கற்றலின் திருக்குறள் திருவிழா” திருக்குறள் உலக சாதனை விழா அமீரகத்தில் உள்ள பிட்ஸ் பிலானி கல்லூரி உள்ளரங்கில் 25 ஜனவரி சனிக்கிழமை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இப்பிரமாண்ட விழாவிற்கு கௌரவ சிறப்பு விருந்தினர்களாக தேசிய சாஹித்ய விருது பெற்ற காப்பியக்கோ கவிமாமணி அஹமது ஜின்னாஹ் ஷர்புதீன், எழுத்தாளர் பரீதாஜின்னாஹ் ஷர்புதீன், பைந்தமிழ் பாவலர் இரா, சனாகி ராமன் என்ற இளமுருகன் மற்றும் தமிழ் ஆர்வலர் அபிராமி முருகேசன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினர்களளாக கேப்டன் டிவி மற்றும் தமிழக குரல் வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் மற்றும் வணக்கம் பாரதம் வளைகுடா தலைமை நிருபர் நஜீம் மரிக்கா, துபாய் ஈமான் தமிழ் சமூக அமைப்பின் நிர்வாகி முஹம்மது ஹாமீது உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
இவ்விழாவில் முக்கிய அம்சமாக 1330க்கும் மேற்பட்ட ஆய்வுரைகள்,7 திருக்குறள் நூல்கள் வெளியீடு, 133 குழந்தைகளின் திருக்குறள் முற்றோதல்,133 திருக்குறள் ஓவியங்கள் மற்றும் கதைகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் 7 மாகாணங்களை இணைத்து நடைபெற்றது. இந்த நிகழ்வு உலக சாதனை புத்தக சாதனையில் (World Book of Records) பதிவு பெற்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு அங்கீகாரத்துடன் செயல்படும்
கற்றல் கல்வி மையம், தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்டத் தொடர்பு மையமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்ச்சியின் நிறைவாக அதன் நிறுவனர் முனைவர் ஸ்ரீ ரோகிணி கௌரவ சிறப்பு விருந்தினர்கள், சிறப்பு விருந்தினர்கள் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தார் மேலும் ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் ஆகியோருக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் அணிவித்து கௌரவித்து மேலும் பிட்ஸ் பிலானி இயக்குநர் மற்றும் நிர்வாகிகள் பஷீர், ஜெயசந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகூறி நிகழ்ச்சியினை நிறைவுசெய்தார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.