துபாய் பிப், 4
ஐக்கிய அரபு அமீரக துபாயில் உள்ள Sports Bay விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா அத்திக்கடை ASDO நண்பர்கள் சார்பாக, எழுவர் கால்பந்து போட்டியில், தமிழகத்தை சேர்ந்த சுமார் 14 அணிகள் கலந்து கொண்டனர்.
இந்த கால்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் அணியினர் முதல் பரிசையும், நாகூர் அணியினர் 2ம் பரிசையும், மதுக்கூர் அணியினர் 3ம் பரிசையும், கூத்தாநல்லூர் அணியினர் 4ம் பரிசையும் வென்றனர்.
இப்போட்டியைக் காண சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் சமூக அமைப்பான துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், கேப்டன் டிவி வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் KVL, தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் வளைகுடா தலைமை நிருபரும் வணக்கம் பாரதம் வார இதழின் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா, குறிஞ்சி நிறுவன குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் ரமேஷ் குமார் மற்றும் ஆர் மீடியா ராஷித் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் அத்திக்கடை, பொதக்குடி மற்றும் கூத்தாநல்லூர் ஜமாத்தார்கள், அனைத்து ஸ்போர்ட்ஸ் கிளப் நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சி அத்திக்கடை ASDO நண்பர்கள் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.