சென்னை ஜன, 30
அரசு ஆட்டோ கட்டணத்தை உயர்த்தாவிடில் பிப்ரவரி 1 முதல் நாங்கள் அறிவித்த கட்டணத்தை வசூல் செய்வோம் என ஆட்டோ சங்கங்கள் அறிவித்துள்ளது. நேற்று ஆட்டோ கட்டணத்தை உயர்த்தக் கூடாது என அரசு எச்சரித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. முன்னதாக ஆட்டோ கட்டணம் முதல் 1.8 கிலோமீட்டருக்கு 50 ரூபாய், அதைத்தொடர்ந்து ஒவ்வொரு கி.மீக்கும் காத்திருப்பு கட்டணம் நிமிடத்திற்கு ரூ.1.50 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.