சென்னை செப், 1
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 460-க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கக்சாவடிகள் இருக்கின்றன. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 53 இடங்களில் இவை உள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 1 ம் தேதி முதல் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளிலும், செப்டம்பர் 1 ம் தேதி முதல் மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று நள்ளிரவு முதல் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.