Spread the love

கீழக்கரை ஜன, 27

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் கிழக்குத்தெரு ஜமாத் தலைவர் ப.அ.சேகு அபூபக்கர் தலைமையில் பாத்திமா ஜூவல்லர்ஸ் அல்ஹாஜ் முஹம்மது ஜுல்பிகார் கொடியேற்றி வைத்தார்.பள்ளி தலைமையாசிரியர் செய்யது அபுதாஹிர் வரவேற்றார்.

பள்ளி தாளாளர் கவிஞர் முகம்மது சுஐபு மற்றும் முதுகலை பொருளியல் ஆசிரியர் சையது அலி வாழ்த்துரை வழங்கினர்.உதவி தலைமையாசிரியர் சௌகர் சாதிக் அலி நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஜமாத்தார்கள், ஆசிரியர்கள்,ஆசிரியைகள்,மாணவர் மாணவிகள் பெற்றோர்கள்,பள்ளி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் கிழக்குத்தெரு ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தலைமையில்,ஜமாத் காரிய கமிட்டி உறுப்பினர் ஹனீப் முகம்மது முன்னிலையில் முன்னாள் கல்விக்குழு உறுப்பினர் காதர் சுல்தான் கொடியேற்றி வைத்தார்.

பள்ளி தாளாளர் சதக் அப்துல் காதர் வரவேற்றார்.மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுஐபு சிறப்புரையாற்றினார்.தலைமையாசிரியர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் கிழக்குத்தெரு ஜமாத் நிர்வாகிகள் கல்விக்குழு உறுப்பினர்கள்,ஆசிரியர்கள்,ஆசிரியைகள்,மாணவர்,மாணவிகள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இஸ்லாமியா பள்ளிகளின் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கிரைம் பிராஞ்ச் துணை காவல் கண்காணிப்பாளர் முகம்மது நாசர் தேசிய கொடியேற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பினை பார்வையிட்டார்.

பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்றாகீம்,தெற்குத்தெரு ஜமாத் தலைவர் அல்ஹாஜ் உமர் அப்துல் காதர் களஞ்சியம்,செயலாளர் செய்யது இப்றாகீம்,எம்.எம்.கே.காசிம்,எம்.எம்.கே.ஜமால் இப்றாகீம்,பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாணவர் மாணவியர்களின் கலை நிகழ்ச்சி,விளையாட்டு போட்டிகள் நடைபெற்று பரிசளிப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.

இதனையடுத்து ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியை ஜாக்குலின் லதா பெஸ்டஸ் கொடியேற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.ஆசிரியை சிக்கந்தர் ஜமீமா வரவேற்றார்.ஆசிரியை மர்ஜான் நன்றி கூறினார்.

மாநில அளவிலான பேச்சு போட்டியில் இரண்டாமிடம் பெற்ற எட்டாம் வகுப்பு மாணவி ஹனிஸ்காவுக்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பரிசும் சான்றிதழும் வழங்கியதற்கு மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆசிரியைகள்,மாணவிகள்,பள்ளி அலுவலர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

நூரானியா துவக்கப்பள்ளியில் தெற்குத்தெரு ஜமாத் தலைவர் உமர் அப்துல் காதர் களஞ்சியம் ஹாஜியார் தலைமையில் மைஃபா மேலாண்மைக்குழு சீனி அப்துல் காதர்,ஜமாத் துணை தலைவர் ஃபவ்சுல் அலிய்யுர்ரஹ்மான்,முகம்மது இம்ரான் முன்னிலையில் நகர்மன்ற துணை தலைவர் ஹமீது சுல்தான் கொடியேற்றி வைத்தார்.

டான்பாஸ்கோ மர்ரே வரவேற்றார்,நகர்மன்ற உறுப்பினர் முகம்மது பாதுஷா துவக்கவுரையாற்றினார்,பள்ளி தாளாளர் நூருல் ஆஃப்ரின் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜமாத் செயலாளர் சயீது இப்ராஹிம் கலந்து கொண்டார்.பள்ளி நிர்வாக மேலாளர் முகம்மது சுபைர் நன்றி கூறினார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் நகர் தலைவர் அஜ்மல்கான் தலைமையில் மாவட்ட துணை தலைவர் சித்தி முன்னிலையில் மாவட்ட செயலாளர் முருகானந்தம் கொடியேற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தில்லையேந்தல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி,அசனா லெவ்வை,லெப்பை தம்பி,பேங்கு மரிக்கா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஜஹாங்கீர் அரூஸி

மாவட்ட நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *