கீழக்கரை ஜன, 22
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மன்பஉல் உலா அரபிக்கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக செயலாற்றியவர் மௌலானா,மௌலவி,ASM சர்தார் முகைதீன் ஹழ்ரத் அவர்களாகும்.
இவர்களிடம் அரபி பாடம் கற்று உலவி என்னும் பட்டத்தோடு வெளியேறி இன்று வரை தமிழகம் முழுவதும் பள்ளிகள்,மதரசாக்களில் ஆன்மீக பணிகளை செய்து வரும் ஆலிம்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கிலாகும்.
மறைந்த மௌலானா சர்தார் ஹழ்ரத் அவர்களுக்கான ராமநாதபுரம் மாவட்ட உலவிகள் சார்பாக நினைவேந்தல் நிகழ்ச்சி கீழக்கரை குளங்கரை பள்ளிவாசலில் இன்று(22.01.2025) காலையில் பள்ளியின் கதீப் மௌலவி சம்சுதீன் ஆலிம் தலைமையில் நடைபெற்றது.
மறைந்த ஹழ்ரத் அவர்களின் கல்விப்பணி குறித்து பல்வேறு இமாம்களும் நினைவு கூர்ந்தனர்.அவர்களின் மறுமை நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.
பழைய குத்பா பள்ளி கதீப் மௌலவி அபுபக்கர் ஆலிம் நன்றியுடன் கூட்டம் நிறைவுபெற்றது.
நிகழ்ச்சியில் கீழக்கரை நகர்,வட்டார ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள்,உலவி பட்டம் பெற்ற ஆலிம்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர் அரூஸி