சிறுதொழில் நலத்திட்ட ஆலோசனை கூட்டம்!
ஏர்வாடி ஜன, 15
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பண்பகம் அறக்கட்டளையின் சிறுதொழில் நலத்திட்ட சேவை மையத்தின் ஆலோசனை கூட்டம் கௌரவ ஆலோசகர் அல்ஹாஜ் சித்திக் ரஹ்மான் அம்பலம் தலைமையில் நடைபெற்றது.
பண்பகம் அறக்கட்டளையின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஏர்வாடி தர்ஹா தீன் நகர் பகுதியில் வசிக்கும் இரண்டு பயனாளிகளுக்கு அல்ஹாஜ் Dr. A. தமீம் அன்ஸாரி, (CEO, ADEEB GROUP, U. A. E.) அவர்களின் தந்தையார் மர்ஹூம் அப்துல் வாஹித் அவர்களின் பெயரில் ஸதக்கத்துல் ஜாரியாவாக வழங்கிய மோட்டார் வசதியுடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக. கீழக்கரை அல்மஸ்ஜிதுல் ரய்யான் A/C ஜும்மா பஜார் பள்ளிவாசலின் கதீஃப் மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி,கீழக்கரை மஜ்மவுல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளையின் தலைவர் நூருல் ஜமான் பரமக்குடி சிகரம் அறக்கட்டளையின் தலைவர் பொறியாளர் சுல்தான்,பண்பகம் அறக்கட்டளையின் பொருளாளர் சுபைர் ஆப்தீன் மற்றும் பண்பகம் இமாம்கள் கலந்து கொண்டனர்.
தாருல் குல்கிய்யா கல்வி குழுமத்தின் தலைமை பணியாளர் முஹம்மது இஸ்ஹாக் நன்றி கூறினார்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்
கீழக்கரை.