கீழக்கரை ஜன, 14
தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு முன்பு வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீவைத்து எரிக்கும் நிகழ்வினை போகி என்று அழைப்பார்கள்.
பொதுவீதியில் எரிக்கப்படுவதால் புகை மண்டலம் சூழ்ந்து காற்று மாசு அடைகிறதென்பதால் இவ்வாண்டு தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கீழக்கரை நகராட்சி சார்பில் ஊரின் பிரதான இடங்களில் போகிக்கான பழைய பொருட்கள் வைக்கும் அடுக்கு பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பெட்டியில் வைக்கப்படும் பொருட்களை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தவதாக தெரிகிறது.இதன் மூலம் புகையில்லா போகியை மக்கள் கொண்டாடுவதும் காற்று மாசுபடாமல் இருப்பதும் வரவேற்புக்குரியதாகும்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்