கீழக்கரை ஜன, 12
கீழக்கரை மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளையும் இந்திய ஜனநாயக மாதர் சங்கமும் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் வாழ்த்துகள் விழா கீழக்கரை நான்காவது வார்டு மறவர் தெரு அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் நகர்மன்ற உறுப்பினர் சூர்யகலா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தோழர் மகாலிங்கம் வரவேற்புரை வழங்கினார்.சமூக நல்லிணக்க பாடலை லெப்பை தம்பி பாடினார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் NPK.கென்னடி,சுரேஷ் மற்றும் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனையடுத்து ராமநாதபுரம் வட்டாட்சியர் பழனிக்குமார்,மாவட்ட அரசு காஜி மௌலானா,மௌலவி,சலாஹுதீன் ஆலிம்,தமிழ்நாடு மின்வாரிய அமைப்பின் தலைவர் குருவேல்,இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணகி,18 வாலிபர்கள் அறக்கட்டளை நிர்வாகி குதுபுதீன் ராஜா வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் MKE.உமர் சிறப்புரையாற்றினார்.அவரது உரையில் பசியோடு வந்தவர்களுக்கு உணவு வழங்கி பசியை போக்கும் அறமே உலகில் உயர்ந்த அறம் என்றும்,அந்த அறத்தின் தூணாக உழவர் பெருமக்கள் உள்ளதாகவும் கூறினார்.
இந்நிகழ்வில் சிறப்புரையில் கூறப்பட்ட விசயங்களில் இருந்து பொது கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிவசக்தி என்ற பெண் சரியான பதிலை கூறி சிறப்பு பரிசினை வென்றார். இந்நிகழ்ச்சியினை அல்மஸ்ஜிதுர்ரய்யான் A/C பஜார் ஜும்ஆ பள்ளி தலைவர் மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி தொகுத்து வழங்கினார்.சுந்தர் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் ஏராளமான பெண்களும் ஆண்களும் அனைத்து சமுதாய பெருமக்களும் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.