ராமநாதபுரம் ஜன, 8
ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் ஊராட்சி செயலாளர் கோகிலா கவனத்திற்கு!
மரைக்காயர் பட்டினம் ஊராட்சியில் சாலை அமைத்ததற்கு நிதி மதிப்பீட்டு பலகையில் நிதி பரிந்துரை என திமுக ஒன்றிய செயலாளர் நிலோபர் கான் பெயர் போடப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,
எதிர்ப்பு கிளம்பியதும் அங்கு பெயர் அழிக்கப்பட்டுள்ளது.
இது போல புதுமடத்திலும் 3 இடங்களில் இதுபோல நிதி பரிந்துரை ஒன்றிய செயலாளர் பெயர் போடப்பட்டுள்ளது.
மக்களின் வரிப்பணத்தில் அரசு நிதியை ஒதுக்குகிறது.
திமுக ஒன்றிய செயலாளருக்கு என தனி நிதி எதுவும் அரசு ஒதுக்குகிறதா.?
தனி நபரின் விளம்பரத்திற்கு அரசு காசை பயன்படுத்துவது சரியல்ல.
உடனடியாக புதுமடத்திலும் இது அழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சமூக நல ஆர்வலர்களும் பொதுமக்களும் முன்வைத்துள்ளனர்.
ஆளும்கட்சியின் ஒன்றிய செயலாளர் எப்படி நிதி பரிந்துரைக்க முடியும்? என்ற கேள்வி தான் பாம்பன், மரைக்காயர்பட்டினம், வேதாளை, புதுமடம் ஊர்களில் பேசும் பொருளாகி உள்ளது.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்