கீழக்கரை ஜன, 8
ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீபத்தில் கீழக்கரை நகராட்சியுடன் தில்லையேந்தல் ஊராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டான மருதன் தோப்பு, முனீஸ்வரம் பகுதிகள் இணைக்கப்படுவதாக அரசு செய்தி வெளியிட்டிருந்தது.
இதனை கண்டித்து மருதன் தோப்பு,முனீஸ்வரம் பகுதிகளை தில்லையேந்தல் ஊராட்சியை விட்டு பிரிக்காதே என்ற வாசகம் அடங்கிய வால்போஸ்டர்கள் ஊர் முழுவதும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.
இதனை அச்சடித்த அச்சகத்தின் பெயரோ யார் அச்சடித்தார்கள் என்ற விபரமோ அலைபேசி எண்களோ இல்லாமல் மொட்டையாக பொதுமக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்