கீழக்கரை ஜன, 27
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 76வது குடியரசு தினம் கோலாகலமாக அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளர் செய்யது ராவியத்தும்மா தேசிய கொடியேற்றி வைத்து, மக்களிடையே சகோதரத்துவமும்,மனிதாபிமானமும் மேலோங்கிட வேண்டுமென தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர் அனீஸ்பாத்திமா,சித்தா பிரிவின் மருத்துவர் பாசிலாபானு, அல்மஸ்ஜிதுர்ரய்யான் பஜார் ஜும் ஆ பள்ளி தலைவர் மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தனர்.
செவிலியர்கள்,பணியாளர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தேசிய கொடியேற்றி வைத்து அனைவருக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில் ஆணையாளர் ரங்க நாயகி,நகர்மன்ற துணைத்தலைவர் ஹமீதுசுல்தான் முன்னிலை வகித்தனர்.
முதன்மை பொறியாளர் அருள் ஏற்புரையாற்றினார்.சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்களான உம்முசல்மா,காயத்ரி,சூர்யகலா,பவித்ரா,பைரோஸ் பாத்திமா மற்றும் நகராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து கீழக்கரை நகர் ஜமாத்துல் உலமா சபை சார்பில் அதன் அலுவலகத்தில் மௌலானா அலிஷா ஆலிம் தலைமையில் நகர்மன்ற உறுப்பினர் எம்.எம்.கே.காசிம் முன்னிலையில் உலமா சபை நகர் தலைவர் மௌலானா முஹம்மது ஆரிஃப் ஆலிம் கொடியேற்றி வைத்தார்.செயலாளர் மௌலானா அப்துல் மன்னான் ஆலிம் வரவேற்றார்.
மௌலானா அஹமது அமானி ஆலிம் சிறப்புரையாற்றினார்.மௌலானா முஹம்மது இஸ்மாயில் ஆலிம் நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் ஆலிம்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்