துருக்கி ஜன, 22
துருக்கி ஹோட்டலில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. கர்த்தல்கயா ரிசார்ட்டில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு இருந்தோர் பலர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில் 66 பேர் உயிரிழந்ததாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அது 76 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக 9 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.