பிரேசில் ஜன, 7
பிரிக்ஸ் அமைப்பில் பத்தாவது நாடாக இந்தோனேசியா இணைந்ததாக அந்த அமைப்பின் தற்போதைய தலைமையான பிரேசில் முறைப்படி அறிவித்துள்ளது. இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா எகிப்து, எத்தியோப்பியா, யுஏஇ ஈரான் ஆகிய நாடுகளுடன் தென்கிழக்கு ஆசியாவின் பெரிய பொருளாதாரமான இந்தோனேசியா இணைவது பிரிக்ஸை வலுப்படுத்தும். பிரிக்ஸ் தற்போது உலக மக்கள் தொகையில் 40% பொருளாதாரத்தில் 25 சதவீதம் பங்களிப்பை கொண்டுள்ளது.