ஈரோடு ஜன, 7
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை என்று விஜய் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிடாத விஜய் இடைத்தேர்தலில் களம் இறங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவெக போட்டியிடவில்லை. 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு அதை நோக்கி தனது கட்சியின் பயணம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாரதிய ஜனதா கட்சி என்று நான்குமுனை போட்டி உருவாகியுள்ளது.