சென்னை டிச, 25
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலன் கண்முன்னே காதலி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது அங்கே வந்த இரண்டு இளைஞர்கள் காதலனை தாக்கி விட்டு காதலியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தமிழ்நாட்டின் முதல் இடம் பெற்ற பல்கலைக்கழகங்களிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது அங்கு இருப்பவரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.