கீழக்கரை டிச, 10
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் பரிபாலன கமிட்டிக்கு உட்பட்ட மக்தூமியா உயர்நிலைப் பள்ளியின் புதிய நிர்வாகிகள் தேர்வு ஜமாத் தலைவர் ஹாஜா ஜலாலுதீன், செயலாளர் ஷர்ஃப்ராஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் பள்ளியின் புதிய தாளாளராக அந்த ஜமாத்தை சேர்ந்த வழக்கறிஞர் நாதியா ஹனிபா தீர்வாகியுள்ளார். அதனை தொடர்ந்து புதிய கல்வி குழு மற்றும் புதிய நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. இதில் புதிய கல்வி குழுவின் தலைவராக ஆடிட்டர் பஷீர் முஹைதீன், செயலாளராக அலி லாஃபரி ஆகியோரும், பள்ளியில் நிர்வாக கமிட்டி புதிய உறுப்பினர்களாக இசதின், பவுசில் அமீன், சுல்தான் செய்யது இப்ராகிம் சாஹிப், செய்யது இப்ராகிம் முகமது ஆசிப் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளிடம் ஜமாத் தலைவர் ஹாஜா ஜலாலுதீன் புதிய தாளாளரை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை புதிய தாளாளர் வெளிப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக குழு ஜமாத்தார்கள் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஜஹாங்கிர் ஆருஸி,
மாவட்ட நிருபர்,