கீழக்கரை நவ, 21
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 19வது வார்டுக்கு உட்பட்ட கிறிஸ்துவ சர்ச் பகுதியில் மழை நீர் தேங்கி மக்களுக்கு போக்குவரத்து இடையூறாக, இருப்பதை கருத்தில் கொண்டு நகராட்சி ஊழியர்களை அழைத்து சென்று அங்குள்ள சாலையை 19வது வார்டு கவுன்சிலரும் பழைய குத்பா பள்ளி ஜமாத் செயலாளருமான மூர் நவாஸ் சரி செய்து கொடுத்தார்.
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்த கவுன்சிலருக்கும் உறுதுணையாக இருந்த நகராட்சி ஊழியர்களுக்கும் அப்பகுதி பொதுமக்கள்
நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்