துபாய் நவ, 4
ஐக்கிய அரபு அமீரக துபாயில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் WIT (Where In Tamilnadu) என்ற ஈவென்ட் நிறுவனமும் மற்றும் அமீரகத்தில் வாழும் கன்னியாகுமரி மக்களும் இணைந்து நடத்திய தமிழ்நாட்டின் கன்னியாகுமரியை நினைவு கூறும்வகையில் அமீரகத்தில் முதன் முதலாக “நம்ம குமரி நாள்” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த அமைப்பின் தலைவி மெர்லின் மற்றும் நம்ம குமரி அசோசியேசன் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில் தமிழ்நாட்டின் முன்னால் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான மனோஜ் தங்கபாண்டியன் மற்றும் உலக இளைஞர்களுக்கு முன்னோடியாகத்திகழும் முன்னால் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலந்திரபாபு ஐபிஎஸ் தலைமையில் ஏற்றம் குழும நிறுவனத்தின் நிறுவனரும் இளம் தொழில்முனைவோர்களுக்கு முன்னோடியாகத்திகழும் தினேஷ் குருசாமி மற்றும் அமீரகத்தில் வசிக்கும் தொழிலதிபர் முருகன் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடனம், ஆடைஅலங்காரம் மற்றும் உணவு போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளோடு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்திந்தினராக கன்னியாகுமரி திமுக மகளீர்அணி தலைவி நாஞ்சில் சிபி, சூப்பர் சிங்கர் புகழ் அபினா அருள், யூடுப்பர் சர்ஜின், கேப்டன் டிவி வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், தினகுரல்தேசிய நாளிதழ் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழ் தலைமை நிருபர் நஜீம் மரிக்கா, டிக்டாக் இன்ஸ்டா புகழ் சாமியுக்ஸா சுஜீத், ரெஸ்கேர் ஹோம் ஹெல்த் கேர் நிர்வாகிகள், உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள், டிக்டாக் பிரபலங்கள் மற்றும் தமிழர்கள், மலையாளிகள் உள்ளிட்டோர் பலர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் குமரி அசோசியேசனின் “நம்ம குமரி” என்ற புதிய தளத்தின் முகவரியும் மேலும் இந்நிகழ்ச்சியில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பங்களுக்கு எதாவது திருட்டு, கொள்ளை, இடையூறுகள் உள்ளிட்ட அவசர உதவிகள் தேவைப்படும்பட்சத்தில் அதற்கான உதவி அழைப்பு நம்பரையும், மெயில் முகவரியும் காவல் தலைமை இயக்குனர் சைலந்திரபாபு அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.