Spread the love

துபாய் அக், 30

ஐக்கிய அரபு அமீரக துபாயில் பிரபல திரையறங்கான ஹயாத் ஸ்டார் கெலரியா திரையறங்கில் எஸ் ஈவென்ட் நிறுவனர்கள் வெங்கட் மற்றும் ஆனந்த் தயாரிப்பில், ஹோப் சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சமூக சேவகருமான கௌசர் இயக்கி அவரும் நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் இணைந்து நடித்த உலகமெல்லாம் வாழும் அயலக மக்களின் வாழ்க்கையின் இறுதிப்பயணத்தை (Departure) மையமாக கொண்ட “புறப்பாடு” என்ற குறும்படம் திரையிடப்பட்டது.

இயக்குனர் கௌசர் பெய்க் இயக்கம் மற்றும் நடிப்பில் 12 நிமிடத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் மனிதர்களின் வாழ்வின் பயணம் இப்படித்தான் இருக்கும் என்ற உண்மையை மையமாக கொண்டு உருவான குறும்படம் இந்த “புறப்பாடு”

இப்படம் இளையராஜா ஒளிப்பதிவில், வீணை நாயகன் ராஜேஷ் வைத்யா, இசையில், மனைவியாக அனுபரமி, விமான பணிப்பெண்ணாக சுஸ்மிதா, மற்றும் சக நடிகர்களாக ரபீக், சதாம் ஹுசைன், கோபால், பரமேஸ்வரி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தை வெளியீடுவதற்கு KRG குழும நிறுவனத்தின் நிறுவனர் தொழிலதிபர் கண்ணன் ரவி, அலைடு மோட்டார்ஸ் நிறுவனர் கமால், டோக்கியோ தமிழ் சங்கம் ஹரி ஆகியோர் பேராதரவில்.

இப்படத்தைக் காண சிறப்பு அழைப்பாளர்களாக கேப்டன் டிவி முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், குறும்பட இளம் இயக்குனர் ஆண்ட்ரியா, எழுத்தாளர் குழுமம் ஜெஸிலா, ஆஸிப்மீரான், வணக்கம் பாரதம் வளைகுடா நிருபர் தஸ்லீ ஆகியோர் சிறப்பு விருந்தினார்களாகவும் மேலும் குடுப்பத்தினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

“புறப்பாடு” குறும்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த அனைவரும் படம் அருமையாக இருப்பதாக தங்களுடைய நேர்மறையான கருத்துக்களை பதிவுசெய்து படத்தின் இயக்குனர் மற்றும் படத்தில் சிறப்பாக நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

M.நஜீம் மரைக்கா B.A.,

இணை ஆசிரியர்.

அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *