சென்னை அக், 25
திமுக ஆட்சியில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பது ஏமாற்று வேலை என பாமக நிறுவன ராமதாஸ் விமர்சித்துள்ளார். கடந்த தீபாவளிக்கு ₹467 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் கூடுதலாக இருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். இதனால் தீபாவளிக்கும் முன்னும் பின்னும் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.