சென்னை செப், 30
ரயில்வே, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு கல்வி டிவியில் இன்று முதல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம், பணியாளர் தேர்வு வாரியம், வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு அக்டோபர் 4வரை காலை 7:00 மணி முதல் 9 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மறுஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பப்படும்.