சென்னை செப், 26
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் நேற்றிரவு பெய்யத் தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நெல்லை, குமரி, உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் பல இடங்களில் மழை பெய்தது. இதனால் சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.