சென்னை செப், 26
போலி ஆவணத்தை பயன்படுத்தி நீர்நிலைகள், காலியான அரசு நிலங்களில் அபகரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டோரை கண்டுபிடித்து கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் நிலத்தை உடனடியாக விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.