ஆக்ரா செப், 22
உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹாலின் பல இடங்களில் விரிசல் மற்றும் சேதம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்ரா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக இடி மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சுவர்கள் பிரதான அறையில் அரேபிய மொழியில் பொறிக்கப்பட்ட குர்ஆன் வாசகம் இருக்கும் பகுதி உள்ளிட்டவை சேதம் அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.