புதுச்சேரி செப், 18
@புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து I.N.D.I.A கூட்டணி சார்பில் இன்று பந்த் நடைபெறுகிறது. ஜூன் 16ம் தேதி மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில் யூனிட்டுக்கு 75 காசுகள் வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மின் கட்டண உயர்வு பிரிபெய்டு திட்டம் மற்றும் மின் துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. பந்த் காரணமாக எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஆகியவையும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.