துபாய் செப்,17
ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் ஆண்டுதோறும் தென்னிந்திய சீனிமாவிற்கான பலபிரிவுகளில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும்.
அதனடிப்படையில் சினிமா துறையிலும், மனிதநேயத்திலும் சிறந்து விளங்கியதற்கான சைமாவின் உயர்ந்த மனிதற்கான விருது மறைந்த தமிழ் நாட்டின் சிறந்த நடிகரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் தேமுதிக கட்சியின் நிறுவனருமான கேப்டன் விஜயகாந்திற்கு அளிக்கப்பட்டது.
இவ்விருதினை பெறுவதற்காக மறைந்த கேப்டன் விஜயகாந்த் மனைவியும் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் அமீரகம் வந்து விருதினை பெற்றுக்கொண்டார். இவ்விருதினை அளிக்கும்போது நடிகர், நடிகைகள், திரை கலைஞர்கள் உட்பட ஒட்டுமொத்த ஆயிரகணக்கானோர் எழுந்து நின்று மரியாதை செலுத்தி கரகோசங்கள் விண்ணைப்பிலக்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
மேலும் விருதினைப் பெற்ற பிரேமலதா விஜயகாந்த் தான் பெற்றவிருதை உலகத்தில் உள்ள அணைத்து தமிழர்களுக்காக சமர்ப்பிக்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து துபாயில் ராயல் கான்கர்ட் நட்சத்திர ஹோட்டலில் தேமுதிக அமீரக நிர்வாகிகள் கலந்தாய்வு மற்றும் தேமுதிக கட்சியின் 20 ஆம் ஆண்டு கொண்டாட்ட கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிக அமீரக பிரிவு செயலாளர் கமால் கேவிஎல் ஏற்பாட்டில் கட்சியின் அமீரக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அமீரகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலார்கள் முன்னிலையில் கேக் வெட்டி சிறப்பாக நடைபெற்றது.
இவவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக, துபாய் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், WIT ஈவென்ட் நிறுவனத்தின் சேர்மன் மெர்லின், டாக்டர் ஜெயந்திமாலா, லட்சுமி பிரியா, தமிழகத்தின் தேசிய நாளிதழ் தினகுரல் மற்றும் வணக்கம் பாரதம் வளைகுடா முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா முத்தமிழ் சங்கம், ஷாஹுல் ஹமீது, தங்கதுரை, அதிமுக நிர்வாகி ரவிச்சந்திரன், அதிமுக அமீரக மகளீரணி தலைவி பானு, அமீர்க தமிழ் சங்க தலைவி ஷீலா, ஆடிட்டர் யுகமூர்த்தி, மீடியா7 ஆஸ்கர், துபாய் புல்லிங்கோ ஷாநவாஸ் மற்றும் அயாஸ், ஆர்ஜே மாயா, கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக அமீரக தேமுதிக செயலாளர் கேப்டன் டிவி வளைகுடா முதன்மை நெறியாளர் Kamal கேவிஎல் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.