துபாய் செப், 10
ஐக்கிய அரபு அமீரக துபாய் கரமா பகுதியில் தனது உணவகத்தின் மற்றொரு கிளையான மலபார் மேஜிக் என்ற பெயரில் புதியதோர் உணவகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்வுணவகத்தினை துபாயில் பிரபலமான ஆர்ஜே மாயா மற்றும் தமிழ் மற்றும் மலையாளம் டிக் டாக் பிரபலமும் குழந்தை நட்சத்திரமான சமிக்ஷா சுஜீத் மற்றும் உணவகத்தின் உரிமையாளர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கேப்டன் டிவி மற்றும் தமிழக குரல் நியூஸ் வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், தமிழகத்தின் தமிழ் தேசிய நாளிதழ் தினகுரல் வளைகுடா தலைமை நிருபரும், வணக்கம் பாரதம் வார இதழ் அமீரக இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா, ரெஸ்கேர் ஹோம் ஹெல்த் கேர் நிர்வாக இயக்குனர் ரம்ஜத் சேக், ALD நிறுவன விற்பனை அதிகாரி மஹாலக்ஷ்மி, மலையாள ஊடக பிரபலம் சஜி, சரண்யா, சுஜீத், உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியினை கல்ப் கட்ஸ் ஸ்டூடியோ நிறுவனத்தின் நிறுவனர்கள் பிரவீன் ஜோய், ஜெயராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் சல்வா ஈவென்ட்ஸ் ஸ்ரீ ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் மலபார் மேஜிக் உணவகத்தின் நிறுவனர் சுமில் பூங்கொத்து கொடுத்து வரவேற்று கௌரவித்து அனைவருக்கும் நன்றி கூறி விற்பனையை தொடங்கிவைத்தார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.