கீழக்கரை செப், 10
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய ஜெட்டி பாலம் அருகில் இருக்கும் வனத்துறை அலுவலகம் வழியாக 45 வயதான பெண் ஒருவர் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக அவ்வழியே நடந்து சென்றுள்ளார்.
அப்போது வனத்துறை அலுவலர் செந்தில்குமார் அந்த பெண்ணை தவறான உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனது உறவினர்களிடம் தகவல் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.
உடனே அந்தப்பெண்ணின் உறவினர்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு வனத்துறை அலுவலரை கைது செய்யக்கோரி வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழக்கரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து காவல் துறையில் புகார் தெரிவிக்குமாறு கூறினர்.
அதையடுத்து அந்தப்பெண் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சம்பந்தப்பட்ட வனத்துறை அலுவலர் செந்தில்குமார் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை சிறையிலடைக்க வேண்டுமென அந்தப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்