பரமக்குடி செப், 11
பரமக்குடியில் நேற்று தியாகி இமானுவேல் சேகரன் 67 வந்து நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் மரியாதை செலுத்த வருகை தந்தனர். இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை ராமநாதபுரத்தில் இருந்து வரும் பேருந்துகள் நைனார் கோயில், இளையான்குடி, சிவகங்கை, மேலூர் வழியாக பரமக்குடிக்கு வராமல் போக்குவரத்து மாற்றப்பட்டது.