தூத்துக்குடி ஆக, 30
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் பஸ் நிறுத்தம் பகுதியில் அட்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்டு உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் மருத்துவர்கள் ஜெய பாக்கியராஜ், லாவண்யா ஆகியோர் பரிசோதனை மேற்கொண்டனர். முகாமில் அனைத்து விதமான நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை மட்டுமின்றி இலவசமாக சர்க்கரை அளவு, ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் ஊசி, மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. முகாமில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.