Spread the love

துபாய் செப், 7

ஐக்கிய அரபு அமீரக துபாய் தேரா பகுதியில் உள்ள அல்குரையர் மாலில் உள்ள ஸ்டார் சினிமா அரங்கில் தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் வெளியான (GOAT) கோட் திரைப்படம் அமீரகத்தில் வசிக்கும் அமீரக தளபதி ரசிகர் மன்ற தலைவர் ரகுவரன், செயலாளர் இஸ்மாயில் , பொருளாளர் சதீஷ், ஒருங்கிணைப்பாளர் சுதாகர் மற்றும் மகளிர் அணி தலைவி ஆர்ஜே மாயா தலைமையில்
அமீரகத்தில் வசிக்கும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் முன்னிலையில் கேக் வெட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேந்தி ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு மிகச்சிறப்பாக திரையிடப்பட்டது.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக அமீரகத்தில் வசிக்கும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.என் சுரேந்தர் மகளும், நடிகர் விஜயின் தாய்மாமா மகளுமான பாடகி பல்லவி வினோத்குமார், வினோத்குமார் , தினேஷ் கர்ணன் சிவகங்கை தெற்கு மாவட்ட ஒன்றியம், சீனிவாசன்,பிரபு, அப்துல் ஹமீத் , சுரேஷ் , மூர்த்தி , புதுகை ஸ்டார் டிவி மற்றும் தமிழக குரல் டிவியின் வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், முத்தமிழ் சங்கம் ஷா மற்றும் ராமசந்திரன், WIT அமைப்பின் நிறுவனர் மெர்லின், KSR குளோபல் கோபி , ஜெகதீஷ் , பார்த்திபன், பாலாஜி, தமிழச்சி ரெஸ்டாரண்ட் தமிழரசி அசோக் , பிரியா , துபாய் தர்பார் தலைவர் கபீர், மீடியா 7 அஸ்கர், ஈமான் இம்தாதுல்லா, டிக்டாக் நசீர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *