Spread the love

துபாய் செப், 2

ஐக்கிய அரபு துபாய் காரமா பகுதியில் உள்ள விளையாட்டு உள்ளறங்கில் தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் செப்டம்பர் 5 ம் தேதி வெளிவர இருக்கும் (GOAT) கோட் திரைப்படத்திற்கான வெற்றி கொண்டாட்டமும் அமீரகத்தில் வசிக்கும் விஜய் ரசிகர்களின் சந்திப்பு கூட்டமும் அமீரக தளபதி ரசிகர் மன்ற தலைவர் ரகுவரன், செயலாளர் இஸ்மால்,

பொருளாளர் சதீஷ்,

ஒருங்கிணைப்பாளர் சுதாகர்,

மகளிர் அணி தலைவி ஆர்ஜே மாயா ஆகியோர் தலைமையில் அமீரகத்தில் வசிக்கும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் முன்னிலையில் கேக் வெட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேந்தி ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழக வெற்றிக் கழக சிவகங்கை ஒன்றிய தொகுதி தலைமை தினேஷ் கண்ணன், கிரீண்பி நிறுவன தலைவர் அஜிஸ் பாஷா, பல்லவி வினோத்குமார் , பிரபு , சீனிவாசன் ,புதுகை ஸ்டார் டிவி மற்றும் தமிழக குரல் டிவியின் வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், KSR குளோபல் கோபி , ஜெகதீஷ் , பார்த்திபன் , பாலாஜி தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின் வளைகுடா தலைமை நிருபரும் வணக்கம் பாரதம் வார இதழின் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா, துபாய் தர்பார் தலைவர் கபீர், நசீர் அகமது, சமூக ஆர்வலர் மண்ணை சுரேஷ், சுலைமான், சுவாமி மாஸ், குடவாசல் பாஹத் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

M.நஜீம் மரைக்கா B.A.,

இணை ஆசிரியர்.

அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *