Spread the love

துபாய் ஆக, 27

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் தமிழ் நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் கொண்டாடப்பட்டது.

இவ்விழா அமீரக பிரிவு துபாய் செயலாளர் கமால் கேவிஎல் தலைமையில், அவைத்தலைவர் காமராஜ், பொருளாளர் வாகை சதீஷ்குமார், மகளிர் அணி கலாவதி, துணைச் செயலாளர்கள் அம்ஜத் அலி, சாகுல் ஹமீது,சிவக்குமார், கார்த்திகேயன், செல்வம் சேகர், இளைஞர் அணிச் செயலாளர் கிருஷ்ணா அருணாச்சலம், அமீரக பிரிவு சமூக வலைதள செயலாளர் தங்க வடிவேலு, துணைச் செயலாளர் ஜெகன் ராஜ், துணை செயலாளர் கேப்டன் சிவா, நைனா முஹம்மத், முன்னாள் செயலாளர் காரல் மார்க்ஸ், பேங்க் மேலாளர் மேரி‌ உள்ளிட்டோர் முன்னிலையில் கேக்வெட்டி விழாவிற்கு வந்திருந்த முக்கியபிரமுகர்கள் அனைவரும் கேப்டன் விஜயகாந்த் பற்றி வாழ்த்துரையோடு நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக KRG குரூப் நிறுவனத்தின் நிறுவனர் கண்ணன்ரவி, சன்டிவி முன்னாள் நெறியாளர் அபுல் ஃபைஸ், துபாய் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், WIT ஈவென்ட் நிறுவனத்தின் சேர்மன் மெர்லின், UTS ரமேஷ் விஸ்வநாதன், மனநல ஆலோசகர் டாக்டர் பஜிலா ஆசாத், தமிழகத்தின் தேசிய நாளிதழ் தினகுரல் மற்றும் வணக்கம் பாரதம் வளைகுடா முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா முத்தமிழ் சங்கம் ராமசந்திரன், ஷாஹுல் ஹமீது, தங்கதுரை, அதிமுக நிர்வாகி ரவிச்சந்திரன், அதிமுக அமீரக மகளீரணி தலைவி பானு, ரெஸ்கேர் ஹோம் ஹெர்த்கேர் நிறுவனர் ரம்ஜத் ஷேக், ஆடிட்டர் யுகமூர்த்தி, கடற்கரை பாண்டியன் ஈமான் நிர்வாகி பீர், மீடியா7 ஆஸ்கர், மதிமுக துபாய் நிர்வாகி துரை, துபாய் புல்லிங்கோ ஷாநவாஸ் மற்றும் அயாஸ், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் கலந்துகொண்ட KRG குரூப் நிறுவனத்தின் நிறுவனர் கண்ணன்ரவி கூறும்போது கேப்டன் விஜயகாந்த் அரசியலையும்தாண்டி அனைவருக்கும் பிடித்த நல்ல மனிதர் ஏழை எளியோர்களுக்கு பல உதவிகளை செய்தவர் அவருடைய பிறந்த நாள் விழாவில் தான் கலந்துகொண்டது மிகவும் சந்தோசமாக நினைக்கிறேன் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியின் நிறைவாக அமீரக தேமுதிக செயலாளர் கேப்டன் டிவி வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

M.நஜீம் மரைக்கா B.A.,

இணை ஆசிரியர்.

அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *