சென்னை செப், 4
தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இது விடுமுறைக்கு இனிவரும் நாட்களில் களஞ்சியம் என்ற செயலி மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து வகை ஊழியர்களும் செப்டம்பர் 1 ம் தேதி முதல் விடுப்பு எடுக்கும் பட்சத்தில் இந்த செயலி வாயிலாக மட்டுமே அனுமதி பெற முடியும். அத்துடன் இந்த ஆண்டில் இதுவரை விடுப்பு எடுத்தவர்கள் விபரங்களையும் இதில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.